தினம் ஒரு லலிதா
நாம்ம்----30
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய், 23/09/25
30. காமேஶ பத்த மாங்கல்ய ஸூத்ர ஶோபித
கந்தரா ।
காமேஸ === காமேஸ்வ்ரன்,இறைவன்
பந்த === கட்டிய , அணிவித்த
மாங்கல்ய === மங்களமான தாலி சூத்ர === கயிறு ஷோபித === அழகுற மின்னும்
கந்தரா
=== கழுத்தினை உடையவள்.
அவளுடைய கழுத்தில் காமேஸ்வரரால் கட்டப்பட்ட மாங்கல்ய சூத்திரம் திருமாங்கல்யமாக
மின்னுகிறது.மாங்கல்யம் கழுத்துக்கும் காண்பதற்கும் அழகு தருவது மட்டுமல்ல அது நித்ய சௌபாக்யம்
மற்றும் சுமங்கலத்தின் பெரும் அடையாளமாகும்
சவுந்தர்ய லஹரி (பாடல் 69) கூறுகிறது, "உங்கள் கழுத்தில் உள்ள மூன்று கோடுகள் உங்கள் திருமணத்தின் போது
கட்டப்பட்ட மங்களகரமான நாண்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் எல்லைகளைப் போல
பிரகாசிக்கின்றன
சாமுத்ரிகா சாஸ்திரத்தின்படி, (உடலின் அம்சங்களின்
விளக்கம்) நெற்றியில், கண்களில் அல்லது இடுப்பில் மூன்று
நேர்த்தியான கோடுகள் செழிப்பைக் குறிக்கின்றன.
காமனை எரித்த காமேஸ்வர்ரிடம் அம்பாள் வேண்டியதனாலே அவர் காமனை உயிரெழுப்பினார். அதன் காரணமாக ரதிதேவியின்
கழுத்திலே உள்ள மாங்கல்யம் நிலைப்பதற்கு அம்பாளே காரணமானாள்.
எனவே மாங்கல்யம் என்பது சுமங்கிலிப்பெண்களுக்கு அம்பாள் அருளிய வரப்ரசாதமாக
இதைக்கொள்ளவேண்டும்
இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை
முப்பத்தொன்றாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்
இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
நன்றி. வணக்கம். ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய், 23/09/25
No comments:
Post a Comment