ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
திங்கள், 3, மார்ச், 2025
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை அறுபத்து நாலு
பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் அறுபத்து ஐந்தாவது வது பாடலைப் பார்ப்போம்.
இந்தப் பாடலில் பட்டர் அம்பாள் தன்னுடைய வல்லமையினால் மட்டுமே சிவனோடிணைந்து குமரக்
கடவுள் அவதரிக்க்க் காரணமாயிருந்த்தை விளக்குகிறார்
ஆண்மகப்பேறு அடைய
ககனமும் வானமும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? வல்லி, நீ செய்த வல்லபமே.
ககனமும் |
பூமியில் வாழ்பவர்களும் |
வான்மும் |
வானுலகில் வாழ்பவர்களும் |
புவனமும் |
இடையில் வாழ்பவர்களும் |
காண |
யாவரும் கண்டு வியக்க |
விற்காமன் |
கரும்பு வில்லைக் கொண்ட |
அங்கம் முன் |
காமனை முன் நாளில் |
தகனம் |
கண்விழியால் எரித்து |
செய்த |
தகனம் செய்தவரான |
தவப் |
தவக்கோலத்திலிருந்த |
பெருமாற்கு |
சிவபெருமானுக்கு |
முந்நான்கு |
பன்னிரெண்டு |
தடக்கையும் |
நீண்ட வலிய கரங்களும் |
இருமூன்று |
ஆறு |
செம்முகனும், |
அழகிய திருமுகங்களும் |
எனத் தோன்றிய |
என்ற பெருமைகளுடன் தோண்றிய |
மூதறிவின் |
ஸ்வாமிநாதனாய் பேறறிவு கொண்ட |
மகனும் |
திருமகனான முருகன் |
உண்டாயது |
தோன்றும் வல்லமை உண்டானது |
வல்லி, |
கொடிபோன்ற அம்மையே |
நீ செய்த |
உன்னுடைய |
வல்லபமே. |
வல்லமையால் |
அன்றோ? |
அல்லவோ!! |
பொருள்:
ககனமும் வானும்
புவனமும் காண – பூமியில்
வாழ்பவர்களும், வானுலகில்
வாழ்பவர்களும், இடைப்பட்ட
உலகங்களில் வாழ்பவர்களும் என எல்லோரும் கண்டு வியக்கும்படி
விற்காமன்
அங்கம் தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு – கரும்பு
வில்லை ஏந்திய மன்மதனின் உடலை எரித்த தவத்தில் சிறந்த சிவபெருமானுக்கு
தடக்கையும் – நீண்ட வலிய
கைகளையும்
செம்முகனும் – சிவந்த
திருமுகமும்
முந்நான்கு – பன்னிரு
கரங்களும்
இருமூன்று – ஆறுமுகங்களும்
எனத் தோன்றிய
மூதறிவின் மகனும் உண்டாயது – என்று பல
விதங்களிலும் பெருமை கொண்ட தகப்பன் சுவாமியான திருமுருகன் மகனாக உண்டாக்கும்
வல்லமை அமைந்தது
அன்றோ வல்லி நீ
செய்த வல்லபமே – அம்மையே
உன்னுடைய வல்லமையால் தானே?!
உரை
அபிராமவல்லியே, நீ இயற்றிய
வலிமைச் செயல், மேலுள்ள
உலகங்களும் தேவலோகமும் பூவுலகமும் பார்க்கும்படியாகக் காமனது உடலை முன் ஒரு
காலத்து எரித்த யோகியாகிய சிவபெருமானுக்கு விசாலமான திருக்கரங்களும், திருமுகங்களும்
முறையே பன்னிரண்டும் ஆறும் என்று அமைய அவதரித்த பழைய ஞானத்தையுடைய குமாரனும்
உண்டாகிய தல்லவா?
விளக்கம்:
ஏ, ஆனந்தவல்லி அபிராமி! உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக்
கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ!
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
திங்கள், 3, மார்ச், 2025
No comments:
Post a Comment