Tuesday, July 25, 2023


 

ஸுப்ரமண்ய புஜங்கம்

சிவதாஸன் ஜகன்நாதன்

 

 நான்காவது ஸ்லோகம்                          முக்தி தரும் முருக தரிசனம்

சென்ற வாரம்

மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்                                                         மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம் |                                            மஹீதேவதேவம் மஹாவேத பாவம்                                                                      மஹாதேவ பாலம் பஜே லோகபாலம் ||

அப்படீங்கிற அழகான ஸ்லோகத்தை பார்த்தோம்.                                      இன்னைக்கு,

यदा सन्निधानं गता मानवा मे भवाम्भोधिपारं गतास्ते तदैव ।

इति व्यञ्जयन्सिन्धुतीरे य आस्ते तमीडे पवित्रं पराशक्तिपुत्रम् ॥ ४॥

யதா ஸந்நிதானம் கதாமானவா மே                                                                               பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ |                                                                      இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே                                                                               தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் ||

அப்படீன்னு ஒரு ஸ்லோகம், முருகப் பெருமானோட சன்னிதி விசேஷத்தை சொல்கிறது. திசங்கரர், திருச்செந்துர்ல கடற்கரையில, முருகப் பெருமானை தரிசனம் பண்ணி ஸ்தோத்ரம் பண்ண ஆரம்பிக்கிறார். அப்போ அவருக்கு முருகப் பெருமான் எதுக்கு இந்த கடற்கரையில குடி கொண்டு இருக்கார்?’ அப்படீன்னு ஒரு ஸந்தேம் வந்ததாம்.

புராணங்கள்ல வருவது என்னன்னா, சூரபத்மன் கடலுக்குள்ள வீரமஹேந்திர பட்டணம் என்ற நகரை நிர்மானம் பண்ணிக்கொண்டு அங்க வசிக்கிறான். அப்போ ஸுப்ரமண்ய ஸ்வாமி, இந்த கடற்கரையில ஒரு படை வீடு அமைச்சு, அந்த சூரபத்மனை போரிட்டு ஜெயிச்சார். அதனால இங்கயே குடியிருக்கார்ன்னு ஸ்கந்த புராணத்துல வருகிறது.

ஆனா, ஆச்சார்யாள் சொல்றார்,

யதாஎப்பொழுது, ‘மானவாமனிதர்கள், ‘மே ஸந்நிதானம் கதாஹா’, என்னுடைய இந்த சந்நிதியை வந்து அடைகிறார்களோ, ‘தேஅந்த மனிதர்கள், ‘ததைவஅப்பொழுதே,  ‘பவாம்போதி பாரம் கதாஹாஸம்ஸாரம் என்னும் சமுத்திரத்தின் அக்கரையை அடைந்தவர்களாக ஆவார்கள்,                                                                           

 இதி வ்யஞ்ஜயன்ன்னு ஒரு விஷயத்தை புரிந்துகொண்ண்டு, , ‘ஸிந்து தீரேஇப்படி கடற்கரையிலே ய ஆஸ்தேஎந்த பகவான் இருக்காரோ, பூரண சான்னித்தியதோடு விளங்குகிறாரோ, ‘பவித்ரம்மஹா பவித்ரமானவரும் பராசக்தி புத்ரம்பராசக்தியின் புத்திரரும் ஆன அந்த ஸுப்ரமண்யரை ஈடேநான் ஸ்தோத்ரம் பண்றேன், ன்னு இந்த ஸ்லோகம்.

அதாவது, ஆச்சார்யாள் சொல்ற காரணம் என்னன்னா, “உங்களுக்கு ஸ்கந்தகிரி-ன்னு அழகான ஒரு இடத்தை கைலாசத்துக்கு பக்கத்துல விஸ்வகர்மா நிர்மாணம் பண்ணி கொடுத்து இருக்கான். அப்பாவோட கைலாசம் இருக்கு, அம்மாவோட மணித்வீபம் இருக்கு. ஆனா இந்த கடற்கரையில ஏன் இருக்கிரீர்கள் என்று நான் தெரிந்துகொண்டேன்                        

. “பக்தர்கள் என்னை வந்து தர்சனம் பண்ணின மாத்திரத்தில், பிறப்பு இறப்பு முதலிய துக்கங்கள் கொண்ட இந்த, சம்சார பந்தத்தில்  இருந்து அவர்களை கரை சேர்ப்பேன். அவர்களை பரமானந்த பரிசுத்தர்களாக ஆக்குவேன்ன்னு என்னை வந்து திருச்செந்தூர்ல தர்சனம் பண்ணா, ஒரு துன்பமும் இல்லாமல் முக்தர்களா ஆகிவிடுவார்கள்”, ன்னு காண்பிக்கறதுக்காகத் தான் இங்க நின்றுகொண்டு இருக்கிரீர்கள். அப்படீன்னு சொல்லி முருகப் பெருமானுடைய அபார கருணையையும் அந்த திருச்செந்தூர் க்ஷேத்ரத்தோட மஹிமையும் சொல்றார்.

இப்படி ஆசார்யாள் நம்மளை கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றுப் படுத்தறார். இந்த ஸுப்ரமண்ய புஜங்கத்துடைய பெருமை என்னென்னா அதோட நிர்வாஹம். ஸ்வாமி தர்சனம் பண்ணின ஆசார்யாள் முக்தர் ஆகி விடுறார். “இப்படி நீங்க சுலபமா எனக்கு முக்தி கொடுத்தீர்களே, உங்களுக்கு நான் எப்படி நன்றி செய்க்வேன்?” ன்னு சொல்லி, அவர் ஒரு அழகான ஒரு ஸ்தோத்ரம் செய்கிறார். அது தான் இந்த  ஸுப்ரமண்ய புஜங்கம்.

எல்லாராலேயும் எல்லா நேரத்துலேயும் கிளம்பி திருச்செந்தூர் போக முடியுமா? நாம எங்க இருக்கோமோ அங்கேயே இந்த ஸுப்ரமண்ய புஜங்கத்தை பாராயணம் பண்ணினா,  அங்கேயே அந்த ஸுப்ரமண்ய தரிசனமும், திருச்செந்தூர் க்ஷேத்ரத்துல இருக்கிற அந்த புண்யமும் பலனும்  நமக்கு கிடைச்சுடும். அப்படி ஒரு அனுக்கிரஹத்தை ஆச்சார்யாள் பண்றார். இந்த ஸுப்ரமண்ய புஜங்கத்தை எங்கே பாராயணம் பண்ணினாலும், அங்கே திருச்செந்தூரில்  ஸுப்ரமண்யர் சன்னதியில் என்ன அனுக்கிரஹம் கிடைக்குமோ, அது கிடைக்கும்ன்னு ஸ்வாமிகள் சொல்வார்.

ஆனாலும் முடிஞ்ச போது ஸுப்ரமண்ய ஸ்வாமியை அந்த க்ஷேத்ரத்திலேயே போய் நாம தர்சனம் பண்ணனும்.

இந்த இடத்துல பராசக்தி புத்ரம்ன்னு சொல்றார்.  இப்படி சன்னிதில வந்து நின்ன உடனே தன் பக்தர்களை முக்தர்களாக ஆக்கணும்னா, அவ்வளோ கருணை முருகப் பெருமானுக்கு எங்கயிருந்து வந்ததுன்னா, அவர் பராசக்தி புத்ரனா இருக்கறதுனால வந்தது அப்படீன்னு  தோன்றுகிறது.

அருணகிரிநாதர், நிறைய அம்பாள் பரமா சொல்லுவார். அப்படி வரும் போதெல்லாம் மடமடமட ன்னு அம்பாளோட நாமாவளியெல்லாம்  அடுக்கி இப்பேற்பட்ட அம்பாளுடைய குழந்தைன்னு சொல்வார். ‘நாம பாராயண ப்ரீதான்னு அம்பாளுக்கு ஒரு பேர் இருக்கு  அந்த மாதிரி திருப்புகழை எடுத்தாலே அம்பாளுடைய  நாமங்கள்  அழகழகா இருக்கும். அதுல ஒன்றை சொல்லிட்டு இன்னைக்கு பூர்த்தி பண்ணிக்கிறேன். யுவதி, பவதி, பகவதி, மதுர வசனி, பைரவி, கௌரி, உமையாள், த்ரிஸுலதரி, வனபஜை, மதுபதி, அமலை, விஜயை, திரிபுரை, புனிதை, வனிதை, அபினவை, அனகை, அபிராம நாயகி தன் மதலை, மலைகிழவன், அனுபவன், அபயன் உபய சதுர் மறையின் நடுமுடிவில்  மணநாறு சீரடியேஅப்படீன்னு சீர்பாத வகுப்பு-ன்னு ஒண்ணு இருக்கு அதோட கடைசி வரிகள். அப்படி அந்த பராசக்தி புத்ரனா இருக்கறதுனால முருகப் பெருமான், அவ்வளோ கருணையினால அவரை வணங்குபவர்களுக்கு  மோக்ஷத்தை அளிக்கிறார்.

யதா ஸந்நிதானம் கதாமானவா மே

பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ

இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே

தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்

இந்த கருணைக்கு பிரதியாக என்னால என்ன பண்ண முடியும்? நான் ஈடேன்னா ஸ்தோத்ரம் பண்றேன்ன்னு அர்த்தம். இப்பேற்பட்ட இந்த கருணா மூர்த்தியை நான் ஸ்தோத்ரம் பண்றேன்ன்னு பீடிகை போட்டு, நம்மளை அந்த திருச்செந்தூருக்கு அழைத்துக்கொண்டு வந்து இருக்கார். அடுத்தடுத்த ஸ்லோகங்கள்ல அந்த  க்ஷேத்ரத்தோட மஹிமை, ஸ்வாமியோட பாதத்துலேர்ந்து கேசம் வரைக்கும், ரூப வர்ணனை பண்ணிட்டு, ‘என் முன்னாடி வந்து நில்லுங்கள்ன்னு வேண்டிக்கொண்டு, அதுக்கப்பறம் சில ப்ரார்த்தனைகள்,

அடுத்த வாரம்  அஞ்சாவது ஸ்லோகத்தை பார்ப்போம்.

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரோ ஹரா

சிவதாஸன் ஜகன்நாதன்

 

 

No comments:

Post a Comment