2
ஓம் நமசிவாய
தினம் தொழும் பாடல்கள்
கருநிறமும்மணிமாலைப்புணையழகும் வளையெயிறும்கவினைச்செய்ய எரிசிகையும்நுதல்விழியும் நடைக்கோலஇணையடியும்இலக எட்டுக்கரம்நிலவ மணிபலகைவெண்டலைவாள் கடிதுடுயேர்சூலமேற்று வெருவமருத்துவனையடர் அகோரசிவன்துணைப்பதச் சீர்விளம்புவாமே
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
ஏறுமயிலேறி விளையாடு முகமொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசு முகமொன்றே
கூறுமடியார்கள் வினை தீர்க்கு முகமொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகமொன்றே
வள்ளியை மணம்புணர வந்த முகமொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே.
தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.
அள்ளக் குறையா அன்போடளவிலாக் கருணை வெள்ளமா யருளும் வித்யாம்பிகையே ப்ரம்மனுக்கு வல்லவேதோ பதேசம்செய் தமலைமகளே நாளுமென் உள்ளமுறை வெண்காடுறை தாயேஅடி பணிந்தேனே 1
கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி யகலாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத தொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!
குங்குமம் அணிந்தவளே அம்மா எங்கும்ஏகமாய் நிறைந்தவளே மங்களஉருக் கொண்டவளே அம்மாபங்க மில்லா வாழ் வருள்பவளே எங்கள்குலம் வாழவைப்பவளேஅம்மா ஏகம்பனின் இனியவளே வங்கக்கடல் போல்வற்றாத வரமருளும் சீதளநாயகியே போற்றி
குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டித்:
தென்திசை இலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவு ளெந்தை,
அரவணைத் துயிலு மாகண்டு,
உடலெனக்குருகு மாலோ,
என் செய்கேனுலகத் தீரே.
செல்வங்களும்வளங்களும்வற்றாத்ருளும் அலைமகள் வல்லபாற்கடலிலிருந்துவந்துவடிவழகுடன் விரும்பி நல்லவாழ்வளிக்கும்நாரணன்மார்பிலிருந்து நாளும் சொல்லர்கரியாசெல்வங்களருளிஅஷ்ட லக்ஷ்மியாவாரே
கலைமகளேகல்வியின்தாயேகாவியங் களின்நாயகியே கலைநயவீணையைக்கையேந்தியவித்தை களின்வாணியே மலைமகள்உமையோடும்அலைமகள்திருமகள்திரு அன்னையோடும் தலைதாழ்த்டிப்பணியுமெனக்குமென்சந்ததிக்கும் கல்விபெருக்குவாயே
பவம் காக்கும் பரமனோடிணைந்து பலம் கொண்டு நவதுர்கையாய் நலங்கள் பலவருள் நாயகியே நாளும் கவலையுற்றோர் துயர் தீர்க்கும் தயாபரியே விடாது தவம் புரிந்து தளறா உடலும் மனமும் பெறுவோமே
அரனுமரியும்இணைந்தோருருவானஅரிஹரனே அரன்சுதன்ஐங்கரன்வேழமுகன்விழை சோதரனே பரமன்பாசக்குழந்தைபழனிவேலனின் இளவலே வரங்கள்வற்றாதருளும்ஸ்வாமியே சரணம்ஐயப்பா
சிவ மங்களாஷ்டகம்
பவாய சந்த்ர சூடாய நிற்குணாய குணாத்மனேகாலகாலாய ருத்ராய நீலக்ரீவாய மங்களம்
வ்ருஷா ரூடாயா பீமாய வ்யாக்ரா சர்மாம்பராய சபசூனாம் பதயே துப்யம் கௌரி காந்தாய மங்களம்
பஷ்மோதூளித தேகாய வ்யாள யக்ஞோபவீதினேருத்ரக்ஷமாலாபூஷாய வ்யோமகேசாய மங்களம்
சூர்ய சந்த்ராக்னி நேத்ராய நம கைலாசவாசினேசச்சிதானந்தரூபாய ப்ரமதேசாய மங்களம்
ம்ருத்யுஞ்சயாய சம்பாய ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தகாரிணே த்ரயம்பகாய சுசஹந்தாய த்ரிலோகேசாய மங்களம்
கங்காதராய சோமாய நமொ ஹரிஹராத்மனேஉக்ராயத்ரிபுராக்னாய வாமதேவாய மங்களம்
சத்யோஜாதாயசர்வாய தவ்யாஜ்ன்ன ப்ரதாயினேஈசானாய நமஸ்துப்யம் பஞ்சவக்த்ராய மங்களம்
சதாசிவஸ்வரூபாயநம ஸ்தத்புருஷாய ச அகோராய ச கோராய மஹாதேவாய மங்களம்
மங்களாஷ்டகம்ஏதத்வைஷம்பூர்ய கீர்தயெத்தினே தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி ரோக பீட பயம் த்தா
ஸமர்ப்பணம
உனக்கே என்றுமாகி என்ப்ராணனையும் சிந்தனையையும் உனக்கே அற்பணித்து உன்மீதென்றென்றும்வைத்தவன்நான் உத்தமனே
விண்ணோரும் மண்ணோரும் மகிழ சுகமளிப்பவனே வந்து கண்மூன்றுடைய கருணாகரனே என் முன் இன்றேதோன்றுவாயே விமலனே
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் யான்தினம் புரிந்திடும் நற்செயலும் வினையும் நலமாய் அமையவேண்டும் அரனே
நலங்கள் நாளும் குன்றாதருளும் நாயகனே நாயேன்நான் மலங்கள் மிகக்கொண்டபாவி நீயோ பெரும் பவித்திரன் நாயகனே
நால்வேதப் புராண சித்தாந்த ஆகமங்களை நான் கற்றாலும் நால்வேத நாயகனே நான் உனைமுழுதும் அறியவல்லேன் நாதனே
நானாவித பாபங்களாலும் சூழப்பெற்றுன்னையே நம்பும் மானுடன் என்னை நின்னருளேக் காக்க வேண்டுகிறேன் நாகபூஷனே
மலங்கள் மூன்றும் மிகக்கொண்டிலங்கும் மானுட னென்னை தலங்கள் சிறக்கும் தயாளனே நீயே தூயனாக்க வேண்டும் மஹேசனே
கற்ற என்கல்வியும் யான்பெற்றவித்தையும் கடுகளவேனும் மற்றவர்க்காக என்றென்றும்அமைந்து பயனுற வேண்டும் கவடிலாதவனே
பெற்ற தாயும் உற்ற தந்தையும் யான் வாய்க்கப் பெற்றனே எற்றை நாளிலும் பெற்ற தாயும் தந்தையும் அற்றவன் நீயே பரமேஸ்வரனே
இவ்வுலகின் இகபர சுகங்களுக்காட்பட்டவன் நானாவேனே எவ்வுலகும் காப்பவனே நாளுமவை எனக்கருள்பவன்நீயே ஈஸ்வரனே
மலங்கள் மூன்றும் கொண்ட பசு நானாவேனே மஹேசனே நலங்கம் நாளும் அருளும் பசுபதியே நின்னடிகள் சரணமே சர்வேசனே
ஹரஹரநமப்பார்வதீபதயேஹரஹரமஹாதேவ
எந்நாடுடையசிவனேபோற்றிஎந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி
திருச்சிற்றம்பலம்சிவசிதம்பரம்
ஸ்வேதாரப்யேஸ்வரப்ரபு
அகோரேஸ்வரஸ்வாமினேநமஹ
No comments:
Post a Comment