Wednesday, December 28, 2011


நோய்தீர்க்கும் ஸ்லோகம்
வைத்யனாதாஷ்டகம்

   சிவன் வைத்யனாதன் ஆவார். ஏனெனில் சகல வியாதிகளுக்கும் அவரே நிவாரணியாவார்.எல்லா வைத்தியர்களுக்கும் அவர் தலைவனாவார் அதனாலாயே அவர் வைத்யனாதன் என்று அழைக்கப்படுகின்றார்.

   வைத்தியர் மருந்து மட்டுமே கொடுக்கின்றார் ஆனால் இறைவனே குணப்படுத்துகின்றார் இதையே
   DOCTOR TREATS AND GOD CURES
  என்று சொல்லுகின்றோம்.
 ஒரு மருத்துவர் ஒரே நோய்க்கு இரு நோயாளிகளுக்கு ஒரே வித வைத்தியம் செய்தாலும் ஒருவர் உடனே குணமடைகின்றார் ஆனால் மற்றொருவர் குணமடைவதில்லை.ஆக மருத்துவத்துக்கும் மேற்பட்ட ஒன்று இருக்கின்றது அதுதான் இறையருள்.அந்த இறையருள் இருந்தால் மருத்துவரின் வைத்தியம் உடனடியாக பலன் அளீக்கின்றது அது இல்லாதவற்கு பலனளிப்பது இல்லை

  அந்த இறையருள் பெற நமக்குள்ள பொக்கிஷம்தான் வைத்ய நாதாஷ்டகம். இதிலே அமைந்துள்ள எட்டு ஸ்லோகங்களும் உன்னதமானவை.அவைகளை தினம் படிப்பதனால் எல்லாவித நோய்களிலிருந்தும் அதிவிறைவில் குணமடைய முடியும் என்பது உறுதி.

  வைத்யநாதாஷ்டாகத்திலே அமைந்துள்ள ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு வைரமாகும் ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் மஹாதேவ மஹாதேவ என்று பதினாறு முறை சொல்லவேண்டும் இதன்படி இந்த அஷ்டகத்தைச்சொல்லிமுடிக்கும்போது மஹாதேவ என்று 144 முறைகள் சொல்லி இருப்போம்

  நம்முடைய பிள்ளைகளுக்கோ பேரக்குழந்தைகளுக்கோ ஏதேனும் நோய் வந்தால் அது உடனடியாக நிவாரணம் ஆக எட்டாவது ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்
   நீல கண்டாய ரிஷபத்வஜாய
   ஸ்ரக்கந்த பத்மோத்ய பிசோபிதாய
   சுபுத்ரதாராதி சுபாக்யதாய
   ஸ்ரீவைத்யனாதாய நமசிவாய
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ

  இதிலே வரும் சுபுத்ரதாராதி என்பது பிள்ளைகளையும் அவர்களைச்சேர்ந்தவர்களையும் குறிக்கின்றது பிள்ளைகளுக்கோ பேரக்குழந்தைகளுக்கோ உடல் நலக்க்றைவு ஏற்படும்போது இந்த
ஸ்லோகம் நல்லதொரு நிவாரணியாகும்

ஓம் நமசிவாய

No comments:

Post a Comment