சனிப்பெயர்ச்சி
ஒன்பது கிரகங்களும் பன்னிரண்டு ராசிகளீல்
சஞ்சாரிக்கின்றன.ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சஞ்சாரம்
செய்தபின் அடுத்த ராசிக்கு மாறுவதையே கிரகப்பெயர்ச்சி என்று சொல்லுகிறோம் அவ்வாறாக
சனிக்கிரகம்
ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்தபின் அடுத்த கிரகத்துக்கு
பெயர்கிரது. எனவே சனிக்ரகத்தின் சுழர்ச்சி முப்பது ஆண்டுகளுகு ஒரு முறை நிகழ்கிறது.
தற்போது சமீபத்தில் சனிப்பெயற்சி நிகழ இருக்கின்றது
ஈஸ்வரன்
ஈஸ்வரன் என்றதும் நம் நினைவுக்கு வருபவ்ர்
சர்வேஸ்வரனான சிவபெருமான்தான் சிவனைத்தவிர ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள் நான்கு பேர்கள்
மட்டுமே அவர்கள்
1. சிவபெருமான் சர்வேஸ்வரன்
2 கணபதி விக்ணேஸ்வரன்
3 சனிகிரகம் சனீஸ்வரன்
4 ராவனன் இலங்கேஸ்வரன்
5 கோடிபெற்றவன் கோடீஸ்வரன்
இதிலே சிவனும் கனபதியும்
கடவுள்கள்
இராவணேஸ்வரன் அபரிமிதமான சிவபக்தி கொண்டவன்
முறையன வழியிலே கோடிகள் சம்பாத்தவர்கள். கோடீஸ்வரர்கள்
ஒன்பது கிரகங்களிலும் சிறப்பு பெற்றவர் என்பதால் சனிகிரகத்துக்கு சனீஸ்வரன்
என்ற பட்டம் உண்டு
பொதுவாகவே சனீஸ்வரன் என்றால் எல்லோருக்கும்
ஒரு பயம் உண்டு.அதிலும் ஏழரை நாட்டு சனி என்றாலோ அல்லது அஷ்டமத்தில் சனி என்றாலோ பயப்படாதவர்களே
இல்லை..சனியின் சுழர்ச்சி முப்பது ஆண்டுகளாகும் ஏழரை நாட்டு சனியின்போது முதல் இரண்டரை
ஆண்டுகள் விரயச்சனியாகும் அடுத்த இரண்டரையாண்டுகள் ஜன்மச்சனியாகும் கடைசி இரண்டரையாண்டுகள் பாதச்சனியாகும்
சனீஸ்வரனால் பாதிப்பும் சங்கடங்களுக்கும்
உள்ளாபவர்கள் உள்ளன்போடும் பக்தியோடும் சனீஸ்வரனையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் எல்லாத்துன்பங்களிலிருந்தும்
விடுபடலாம்.எந்தக்கடவுளும் அல்லது எந்த கிரகமும் பக்தர்களுக்கு துன்பம் உண்டு பண்ணுவதில்லை,
அவரவ்ர்களின் கர்மவினைகளே பலன்களாக வருகின்றன அவைகளை ஈசனின் அருள் மூலம் முழுமையாக
வெல்லமுடியும்.
இதைத்தான் கோளறுபதிகம் சொல்லுகின்றது
அதிலே ஞானசம்பந்தர் பத்து அழகான பதிகங்களில் ஒன்பது கிரஹங்களும் எவ்வாறு நன்மையை மட்டுமே
தருகின்றவையாக அமையமுடியும் என்று விளக்குகின்றார்.ஒவ்வொரு பாட்டின் முடிவிலும்
நல்ல நல்ல
அவை மிக நல்ல நல்ல அடியார் அவற்கு மிகவே
என்று முடிக்கின்றார்
பதினோறாவது பாடலிலே
தானுறு
கோளும் நாளும் வந்து அடியாரை நலியாத வண்ணம்
உரைசெய் ஆனமாலை ஓதும்
அடியார்கள் வானில்
அரசாள்வார் ஆணை நமதே
என்று ஆணையிட்டுச்சொல்லுகின்றார்.
எனவே ஈஸ்வரனின் அருள் பெற்றோர்க்கு எல்லா கிரகங்களும் எல்லாக் காலங்களிலும்
நல்லவையாகவே அமையும்.அவை எந்த தீமையும் செய்யா.எனவே தினமும் கோளறுபத்கம் படித்து ஈசனருள்
பெற்று எல்லாக்கோள்களின் நல்லருளையும் பெறுங்கள்
வேயுருதோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை
முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
பாம்பு இரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல அவை மிக நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
இந்த முதல் பாடலையும் அதைத்தொடர்ந்து
வரும் மற்ற ஒன்பது பாடல்களையும் தினமும் ஈசன் முன் ஓதி அவனருள் பெற்று எல்லா கிரகங்களின்
அருளையும் பெற்று உய்வோம்
ஓம் நமசிவாய
திருசிற்றம்பலம்
No comments:
Post a Comment