Sunday, December 18, 2011


விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

விஞ்ஞானம் எப்படி உண்மையோ மெய்ஞ்ஞானமும் அப்படியே உண்மையாகும்.
விஞ்ஞானத்தின் முடிவே மெய்ஞ்ஞானத்தின் ஆரம்பமாகும
வெளிப்படையான விஞ்ஞான ஆய்வுக்கு மெய்ஞ்ஞானம் உட்பொருளைத்தருகின்றது.

விஞ்ஞானத்தில் உடலும் செயலும் ஒரு பொருளை ஆராய்கின்றன அதற்கு வடிவம் உண்டு.ஆனால் மெய்ஞ்ஞான
உண்மைகளை உணர்வாலும் ஆத்மாவினாலும் உணர்ந்துதான் அறியமுடியும் ஏனெனில் அவைகளுக்கு உருவம் கிடையாது.
ரோஜா மலரைக்கண்டு அதன் அழகை ரசிக்கின்றோம். அதன் வண்ணத்தை வார்த்தைகளால் விளக்குகின்றோம்.
ரோஜா மலரின் இனிய மனம் மயக்குகின்ற மணத்தை உணர்ந்து
ரசித்து மகிழ்கின்றோம் .ஆனால் அந்த மணம் எப்படி இருக்கின்றது என்று நம்மால் வார்த்தைகளால் விளக்க முடியாது.அதுபோலத்
தான் மெய்ஞ்ஞான உண்மைகளை உணர மட்டுமே முடியும்.

மேலே தூக்கி எரியப்பட்ட பொருள் கீழேவிழும் என்பது விஞ்ஞான உண்மை இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அது
ஏன் கீழே விழுகிறது என்றால் புவியீர்ப்பு என்று எல்லோரும் சொல்வோம் உண்மையும் அதுதான்.ஆனால் அந்த புவியீர்ப்பு
GRAVITATION எப்படி இருகும் என்று யாராலும் விளக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.

ஆனால் மேலே தூக்கி எரிந்த பொருள் கீழே விழுவதும் அதற்கு புவியீர்ப்புதான் காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.
அந்த இரண்டுமே என்றுடன் ஒன்று கலந்து விளங்குபவை.
உலகிலே அனைத்துமே இரண்டிரண்டாகதான் இயங்குகின்றன
ACTION  REACTION
நன்மை  தீமை
இரவு    பகல்
வெப்பம்     குளிர்ச்சி
ஆண்        பெண்
இளமை     முதுமை

என்று சொல்லிக்கொண்டே போகலாம்
எனவே ஒரு வட்டத்திலே 360 ட்கிரியும்  0 டிகிரியும் ஒரே புள்ளியில் அமைந்திருப்பது போல் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஒரே இடத்திலிருந்துதான் இயங்குகின்றன

No comments:

Post a Comment