ஈசனை அடையும் மார்கங்கள்
நாயன்மார்களான
அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரும் ஈசனருள் பெற்றவர்கள்.
.அவர்கள் ஒவ்வொருவரும் ஈசனருள் பெறவும் அவனோடு ஒன்றரக்கலக்கவும்
அவர்கள் கொண்ட மார்கங்கள் வெவ்வேறானவையாகும்.. நாம் முன்பு
பார்த்ததுபோல இறைவனருள் பெறவும் அவனை வணங்கவும் ஒன்பது மார்கங்கள் உள்ளன..ஆனால் ஈசனை
அடைவதற்கான மார்க்கங்கள் நான்காகும்
நமது நாயன்மார்கள்
நால்வரும் ஈசனை அடைந்த அந்த நான்கு மார்கங்களாவன
1.
சற்புத்திர மார்கம்
2.
சன் மார்கம்
3.
சக மார்கம்
4.
தாச மார்கம்
இந்த மார்கங்கள்
சொல்லுவதெல்லாம் இறைவனை இப்படித்தான் அடைய வேண்டும் என்பதில்லை உளமாற அவனருளை வேண்டினால்
எந்த மார்கத்தின்மூலமும் அவனை அடையமுடியும்
சற்புத்திர மார்கம்
திருஞானசன்பந்தர்
லோகமாதாவிடம் ஞானப்பால் உண்டு ஞானக்குழந்தையாக ஈசனருள் பெற்றார் அவர் ஈசனுக்கு மகனாக
இருந்து இறைத்தொண்டு புறிந்து அவனை அடைந்தார் இறைவனுக்கே
மகனாக இருந்து அவனோடிணைந்ததால்
அவரது மார்கம் சற்புத்திர மார்கமாகும்
சன்மார்கம்
உலகிலே சமத்துவமும் சகோதரத்துவமுமே மேலானவை.தான் மட்டுமல்லாது
அனைவரும் இறைத்தொண்டில் ஈடுபட்டு இறையருள் பெற்றுய்ய முடியும் என்ற சன்மார்க தத்துவத்தை
உணர்த்தியவர் மாணிக்கவாசகர் அவர் ஈசனோடு இயைந்த மார்கம் சன் மார்கமாகும்
சக மார்கம்
இறைவனை தனக்கு இணையாக நல்ல நண்பனாக எண்ணி அவ்ரது மலரடிக்குத்தொண்டு
செய்து அவரை அடைவதே சக மார்கமார்கமாகும் சுண்டரமூர்த்தி நாயனார் ஈசனை தன்னுடையன் நண்பனாகக்கொண்டு
நட்பை வளர்த்துக்கொண்டு அதன்மூலம் அவனருள் பெற்றுய்ந்தார் இதுவே சக மார்கமாகும்
தாச மார்கம்
தாசன் என்பவன் அடிமையாவான் இங்கே தாசன் என்பவன் ஈசனுக்கு
அடிமையாவான்.அடியார்க்கும் அடியேன் என்றால்
ஈசனடியாற்கடியேன் என்று பொருளாகும் தையே தான் பெரியபுராணத்திலே
அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன் என்று கூறுகின்றார் அவ்வாறு இறைத்தோண்டையே
ப்ரதாணமாகக்கொண்டு இறைவனை அஃபைந்தவர் திரு நாவுக்கரசர் இதுவே தாச மார்கமாகும்
ஆக இறைவனை அடைய
நாம் எந்த மார்கத்தை வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம் ஆனால் அவன்மேல் உண்மையான அன்பும் பக்தியும் அளவிலாப்பற்றும்
இருந்தால் அவன் நம்மை என்றும் இரு கரம் நீட்டி ஏற்றுக்கொள்ளுவான்
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment