Wednesday, August 9, 2023

 



 

ஸுப்ரமண்ய புஜங்கம் ஆறாவது ஸ்லோகம் 

 

சிவதாஸன் ஜகன்நாதன்

 

போன வாரம்   ஸுப்ரமண்ய புஜங்கத்துல அஞ்சாவது ஸ்லோகம்.

 

யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா

ததைவாபத: ஸந்நிதெள ஸேவதாம் மே |

இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்

ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் ||

 

ன்னு இந்த ஸ்லோகத்தை பார்த்தோம்.

 எந்த பக்தர்கள் முருகப் பெருமானை திருச்செந்தூர்ல சேவிக்கறாளோ, அவாளுக்கு எல்லா விதமான ஆதி வியாதிகளும் நிவர்த்தி ஆயிடும்-னு இதற்கு அர்த்தம்.

 

இன்றைக்கு  ஆறாவது ஸ்லோகம்

 

 

கிரெள மந்நிவாஸே நரா யேsதிரூடா

ததா பர்வதே ராஜதே தேsதி ரூடா |

இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூட:

ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து ||

 

ன்னு ஒரு ஸ்லோகம். ஆசார்யாள், திருச்செந்தூர் க்ஷேத்ர மஹிமையெல்லாம் சொல்லிக்கொண்டே வருகிறார். அங்கே பக்கத்துல கந்த மாதன பர்வதம் அப்படீன்னு ஒண்ணு இருக்கு. இப்ப வள்ளி குஹை-ன்னு  காண்பிக்கிக்கிறார்கள். அதுதான் கந்தமாதன பர்வதம்-னு சொல்லுகிறார்கள். முருகப் பெருமான் மலையில குடியிருப்பார், இவரோட அப்பா, பரமேஸ்வரன் கைலாச மலையில இருக்கார் இல்லையா? அதனால பிள்ளையும் மலைகளை ரொம்ப விரும்பற ஸ்வாமி. அப்படி அந்த கந்தமாதன பர்வதத்துல விளங்கக் கூடிய முருகனை, அந்த வள்ளி குஹையில முருகனும், வள்ளியுமா இருக்கற ஒரு சன்னிதி இருக்கு. திருச்செந்தூர் போனா அங்கேயும் போய் அவசியம் ஸ்வாமி தர்சனம் பண்ணணும். பண்ணிணா அதோட பலன் என்னன்னு இந்த ஸ்லோகத்துல சொல்றார்.

 

‘யே நராஹா’ எந்த மனிதர்கள் 

‘மந்நிவாஸே’ என்னுடைய வாசஸ்தானமாகிய இந்த கந்தமாதன மலையில்

 ‘அதிரூடாஹ’ ஏறுகிறார்களோ,

கோவில்ல ஸ்வாமி கடலை பார்த்துண்டு இருப்பார். முன்னாடி போய்  தர்சனம் பண்ணணும். பக்கத்துல கொஞ்சம் தூரம் நடந்து போனா அங்க கந்தமாதான மலை, வள்ளி குஹை இருக்கும். அங்க கொஞ்சம் படி ஏறுகிற மாதிரி இருக்கும். அங்க போய்

 ‘அதிரூடாஹ பவந்தி’, யார் அந்த மலையில ஏறுகிறாளோ,

அங்க ஸ்வாமி தர்சனம் பன்றாளோ,

‘தே’ அவர்கள் அப்போதே,

 ‘ராஜதே பர்வதே’ ராஜதம்னா வெள்ளினு அர்த்தம். கைலாச மலை, வெள்ளி மலை. கைலாச மலையில்

 ‘அதிரூடாஹ’  ஏறி வாசம் பண்ணுகிறவர்களாக, அதவாது கைலாசத்துக்கு போன புண்யம் கிடைக்கும் அப்படீன்னு ஒரு அர்த்தம்.

 

இன்னொரு அர்த்தம்,  பகவான் எந்த உலகத்துல இருக்காரோ அந்த உலகத்துலேயே நாம போயி இருக்கறது ஒரு பெரிய பாக்யம். அதனால் தானே ஓடி ஓடிப் போய் பெரியவாளை தரிசனம் பண்றோம். அந்த அதிஷ்டானத்துக்கு போனாலே அந்த ஒரு vibration இருக்கு. அனுக்ரகம் கிடைக்கும், என்கிற மாதிரி,

 

 அந்த முருகப் பெருமானோட பக்கத்துல இருக்கறதுங்கறது, பக்தர்கள் வேண்டும் ஒரு பாக்யம். அப்படி இந்த திருச்செந்தூர்ல வந்து இந்த கந்தமாதான மலையில ஏறி ஸ்வாமியை தர்சனம் பண்ணினா, கைலாசத்துல ஸ்வாமி பக்கத்துல இருப்பார்கள், அப்படீன்னு சொல்றார் ஆதி ஆச்சார்யாள். ‘இதி ப்ருவன் இவ’ சொல்லுகிறவர் போல், அந்த கடற்கரையில முருகப் பெருமான் இருக்கார். மலை பக்கத்துல இருக்கார்ன்னா என்ன அர்த்தம்? இந்த மலையில ஏறினா கைலாசத்துல ஏறி முருகப் பெருமான் பக்கத்துலேயே நித்யவாசம் பண்ணலாம்ன்னு அர்த்தம்-னு சொல்றார்.

‘கந்த சைலாதிரூடாஹா’ கந்த சைலத்திலிருக்கும் ‘ஷண்முக:’ ஆறுமுகத்தோடு கூடிய ‘தேவஹ’ இந்த தெய்வமான ஸுப்ரமண்ய ஸ்வாமியை தரிசித்தேன். அவர் எனக்கு ‘ஸதேவோ முதே மே ஸதா ஷண்முகோஸ்து’ ‘முதமே அஸ்து’ ன்னா எனக்கு எப்போதும் அவர் சந்தோஷத்தை கொடுக்கட்டும்ன்னு அர்த்தம். இந்த ‘ஷண்முக:’-ங்கற இடத்துல தேதியூர் சாஸ்த்ரிகள் ஆறு முகங்களை எடுத்துக்கொண்டு முருகப்பெருமான் ஆறு பேருக்கு ஷடக்ஷர மந்தரத்தை உபதேசம் பண்ணினார்ன்னு சொல்லியிருக்கார்.

 

அதவாது ஸநத்குமாரர், நாரத மஹரிஷி, அகஸ்தியர், ப்ரம்மா, தேவேந்திரன், சரஸ்வதி தேவி, இந்த ஆறுபேருக்கும், ஒரே காலத்துல ஷடக்ஷரி உபதேசம் பண்றதுக்காக ஆறு முகத்தை கொண்டார்ன்னு சாஸ்திரங்கள் இருக்குன்னு சொல்றார்.

 

, அந்த ஷடக்ஷரி மஹிமையை நான் படிக்கிறேன். முதல் எழுத்தான

 ச-காரத்தால் லக்ஷ்மியும், இரண்டாவது

ர-காரத்தால் வித்தையையும், மூன்றாவது

வ-காரத்தால் போக மோக்ஷத்தையும், நான்காவது

ண-காரத்தால் சத்ரு ஸம்ஹரமும், ஐந்தாவதுஆனா

ப-காரத்தால்  ம்ருத்யுவை ஜெயிப்பதும், ஆறாவதான

 வ-காரத்தால் நோயற்ற வாழ்வும் கிடைக்கும்.

 

இந்த ஷண்முகரை பூஜை பண்ணினா, தர்சனம் பண்ணா, இந்த ஆறுமே கிடைக்கும். இப்படி எல்லாமே கிடைச்சிடுதுன்னா சந்தோஷம்தானே. நமக்கு சந்தோஷத்தை கொடுக்கிறார்ன்னு இருக்கு.

நமக்கு மந்த்ரங்கள் எல்லாம் முறையா ஜபிக்க முடியுமா தெரியலை, அடியார்க்கு அடியனா இருக்கலாம்ன்னு இந்த ஸ்லோகத்துல நான் புரிஞ்சுண்டேன். ஷடக்ஷரியோட பெருமை அபாரம். அந்த மந்த்ரங்களை ஜபிச்சு, முருகப் பெருமானுக்கு அடியவர்களா இருக்கறவர்களுக்கு நாம் அடியவர்களா இருப்போம்.

நம: பார்வதீ பதயே…

ஹர ஹர மகாதேவா

அடுத்த வாரம் ஏழாவது ஸ்லோகத்துடன் ச்ந்திப்போம்

ஓம் சரவணபவாய நமஹ

 

Monday, August 7, 2023

 

                                              பால் நினைந்து ஊட்டும்                                                               தாயினும் சாலப் பரிந்து... 

 சிவதாஸன் ஜகன்நாதன்


பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ                                   பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா                                                  ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே!                                                சிவபெருமானே!
   யான்உனைத்தொடர்ந்துசிக்கெனப்பிடித்தேன்எங்கெழுந்                                                தருளுவது இனியே!

 

பால் நினைந்து ஊட்டும் - குழந்தைக்குப் பசிக்கும் நேரத்தை அறிந்து பால் ஊட்டுகின்ற

தாயினும் சாலப் பரிந்து - தாயைவிட மிகவும் அன்பு கொண்டு 

நீ பாவியேனுடைய - நீ பாவியாகிய என்னுடைய

ஊனினை உருக்கி - உடம்பை உருக்கி 

உள்ளொளி பெருக்கி - உள்ளத்தில் அறிவொளி பெருக்கி 

உலப்பிலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து - அழியாத இன்பமாகியத் தேனினைச் சொரிந்து

புறம் புறம் திரிந்த செல்வமே - எல்லாப் புறங்களிலும் கூட வந்து என்னைக் காக்கும் செல்வமே! 

யான் உனைத் தொடர்ந்து - நான் உன்னைத் தொடர்ந்து 

சிக்கெனப் பிடித்தேன் - உறுதியாகப் பற்றினேன்

எங்கெழுந்தருளுவது இனியே - இனிமேல் நீ எங்கே எழுந்தருளிச் செல்வது?

சிவபெருமானே - சிவபிரானே!

நடைமுறை உலகத்தைப் பார்த்தால் மூன்று விதமான தாய்மார்களைப் பார்க்கலாம். குழந்தை பசியால் அழுதாலும் பால் கொடுக்காதவள் கடைநிலைத் தாய்.                                                                                                                                  குழந்தை அழுதவுடன் பால் கொடுப்பவள் இடைநிலைத் தாய்.                                                                                                                           குழந்தை அழுவதற்கு முன்னர் பசி நேரம் என்று அறிந்து நேரா நேரத்திற்குப் பால் தருபவள் தலைநிலைத் தாய்.                                                                                                   அப்படி காலமறிந்து பால் ஊட்டும் தலைநிலைத் தாயையும் விடச் சிறந்தவன் இறைவன். தலைநிலைத் தாயைவிட மிகவும் பரிந்து வாத்ஸல்யமுடன் உலகத்து உயிர்களையெல்லாம் காப்பவன் தாயுமானவன்.

மானிடத்தாய் உடலை மட்டுமே வளர்க்கும் போது இறைவனோ உடலோடு உள்ளத்தையும் சேர்த்து வளர்ப்பவன். அதனால் ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்குகின்றான். உள்ளொளி பெருகியதால் உள்ளத்தின் உள்ளே என்று அழியாததாகவும் திகட்டாததாகவும் உள்ள இன்பத் தேன் பொழிந்தது.

உள்ளே பொழிந்த தேன் வெளியிலும் பொங்கிப் பரவியது. உள்ளே மட்டும் காக்காமல் வெளியிலும் எத்திசையிலும் இறைவன் இருந்து அடியவரைக் காக்கின்றான். அப்படி என்றும் நீங்காத செல்வமாக இருப்பவன் சிவபெருமான்.

அவன் நம்மைத் தொடர்ந்து எங்கும் நிறைந்திருக்க அவனை நாம் தொடர்ந்து சென்று சிக்கெனப் பிடித்தல் எளிது தானே. உண்மையில் அவன் நம்மைத் தொடர நாம் தான் அவனை உதறுகின்றோம். அதனால் அடிகளார் சிக்கெனப் பிடித்த போது அவனால் எங்கும் எழுந்தருள முடியாது. ஆனால் மறைத்தலும் அவன் தொழிலாதலால் நாம் அவனைப் பிடிக்கும் போது மறைந்துச் செல்வதைப் போல் ஒரு போக்கு காட்டுவான். அப்போது 'நீயும் எனைத் தொடர்ந்தாய். நானும் உனைத் தொடர்ந்தேன். இப்போது எங்கே சென்றீர்?' என்ற கேள்வி எழுந்து உருக்கும். அதுவே இப்பாடலில் வெளிப்பட்டது.

: சிவன், திருவாசகம்



 

Friday, August 4, 2023

 


தெய்வத்தின் குரல்

 

ஸ்வாமி நாமா? இல்லை என்றால்….?

 

தெய்வத்தின் குரல் இன்றைய பதிவில் பரமாச்சார்யார்                                          அவர்களின் அடுத்த அழகான பதிவைத்தந்துள்ளேன்                                                  படித்து மகிழுங்கள்

 

சிவதாஸன் ஜகன்நாதன்

ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்கள். அதாவது நாமேதான் ஸ்வாமி என்கிறார். “நான்தான் ஸ்வாமி” என்றுதான் ஹிரண்யகசிபுவும் சொன்னான். அவனை ஸ்வாமியே நரசிம்மமாக வந்து சம்ஹாரம் செய்யும்படி ஆயிற்று. ஆசார்யாள், “நாம்தான் ஸ்வாமி” என்று சொல்வது ஹிரண்யகசிபு சொன்னது போலவா?

இல்லவே இல்லை. “நான்தான் ஸ்வாமி” என்று ஹிரண்யகசிபு சொன்னபோது தன்னைத் தவிர வேறு ஸ்வாமியே கிடையாது என்ற அகங்காரத்தில் சொன்னான்.

பகவத் பாதர்களோ ஸ்வாமியைத் தவிர வேறு எதுவுமே கிடையாது என்பதால்நாமும்ஸ்வாமிதான்என்கிறார்.                                                              ஜீவன் தனக்கு உள்ள அகங்காரத்தை அடியோடு விட்டு விட்டால் இவனே பிரம்மத்தில் கரைந்து பிரம்மமாகி விடுகிறான் என்கிறார். இ்இப்போது நாம் உத்தரணி ஜலத்தைப்போல் கொஞ்சம் சக்தியுடன் இருக்கிறோம். ஸ்வாமி அகண்ட சக்தியுடன் சமுத்திரமாக இருக்கிறார். அந்தச் சமுத்திரத்திலிருந்துதான் இந்த உத்தரணி ஜலம் வந்தது. இந்த உத்தரணி ஜலம், தான் தனி என்கிற அகங்காரத்தைக் கரைத்து சமுத்திரத்தில் கலந்து சமுத்திரமே ஆகிவிட வேண்டும்.

நாம் ஸ்வாமியாக இல்லாவிட்டால், ஸ்வாமியைத் தவிர வேறான ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறெனில் பரமாத்மாவுக்கு வேறான வஸ்துக்களும் உண்டு என்றாகிவிடும். அதாவது, பல வஸ்துக்களில் பரமாத்மாவும் ஒன்று என்றாகி விடும். அவருடைய சம்பந்தமில்லாமல் அந்தப் பல வஸ்துக்கள் உண்டாகி இருக்கின்றன என்றாகும். இப்படி இருப்பின் அவர் பரமாத்மா, ஸ்வாமி என்பதே பொருந்தாதே! எல்லாமாக ஆன ஒரே சக்தியாக இருக்கிற மட்டும்தானே அவர் ஸ்வாமி! எல்லாம் அவர் என்னும்போது நாம் மட்டும் வேறாக இருக்க முடியுமா? எனவே, ‘ஸ்வாமியே நாம்’ என்று வெளிப்பார்வைக்கு அகங்காரமாகப் பேசுகிற அத்வைதிகள், ஸ்வாமியின் மகிமையைக் குறைக்கவில்லை. மாறாக, ‘ஜீவன் ஸ்வாமி அல்ல; இவன் அல்பன், அவர் மகா பெரிய வஸ்து; இவன் வேறு; அவர் வேறு’ என்று அடக்கமாகச் சொல்கிறவர்கள்தான், தாங்கள் அறியாமலே அவரைப் பல சாமான்களில் ஒன்றாக்கி அவருடைய மகிமையைக் குறைத்து விடுகிறார்கள். அவரே சகலமும் என்றால் நாமும் அவராகத் தான் இருந்தாக வேண்டும்.

சமுத்திரமாக இருக்கிற அவரேதான் ஆற்று ஜலம், குளத்து ஜலம், கிணற்று ஜலம், அண்டா ஜலம், செம்பு ஜலம், உத்தரணி ஜலம்போல் தம் சக்தியைச் சிறுசிறு ரூபங்களாகச் செய்துகொண்டு பலவித ஜீவ ஜந்துக்களாகியிருக்கிறார். இதில் மனிதனாகும்போது பாப புண்ணியத்தை அனுபவிக்கவும், பாப புண்ணியம் கடந்த நிலையில் தாமே ஆகிவிடவும் வழி செய்திருக்கிறார். மனிதனாகும்போது மனசு என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாப புண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்கச் செய்கிறார்.

மனசு ஆடிக் கொண்டேயிருக்கிற நிலையில் உள்ள நாம் எடுத்த எடுப்பில் பாப புண்ணியமற்ற நிலையை அடைந்து, அவரே நாம் என்று உணர முடியாது. ஆகவே, அவரே நாமாக இருந்தாலும், அதை நாம் அனுபவத்தில் உணருவதற்கு அவரது அருளைப் பிரார்த்திக்க வேண்டியர்களாகவே இருக்கிறோம். அவர் மகா பெரிய ஸ்வாமி, நாம் அல்ப ஜீவன்-அவர் மகா சமுத்திரம், நாம் உத்தரணி ஜலம் என்கிற எண்ணத்தோடு ஆரம்பத்தில் பக்தியே செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஸ்வாமி கொடுத்துள்ள மனசுதான் இப்போது நம்மை அவரிடமிருந்து பேதப்படுத்துகிறது. இந்த மனசை எடுத்த எடுப்பில் போ என்றால் போகாது. ஆகவே, இந்த நிலையில் இதே மனசால் அவர் ஒருத்தரை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். மனசை அவர் குரங்காகப் படைத்திருக்கிறார். அந்தக் குரங்கு இப்போது தேகத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்வாமி இந்தத் தேகத்தை நசிப்பதாக அல்லவா வைத்திருக்கிறார்? இந்த அழுகல் பழத்தை மனக்குரங்கு விட்டுவிட வேண்டும். அழுகாத பழம் கிடைத்தால் அழுகல் பழத்தைக் குரங்கு போட்டுவிடும். அழுகாத மதுரமான பழம் பரமாத்மாதான். அதை மனத்தால் பிடித்துக்கொண்டு சரீரப் பிரக்ஞையை விட்டுவிட அப்பியசிக்க வேண்டும். இதற்குத்தான் பக்தி, பூஜை, க்ஷேத்திராடனம் எல்லாம் வைத்திருக்கிறது. இவற்றில் மேலும் மேலும் பக்குவமடைந்து சரீரப் பிரக்ஞை, அகங்காரம் அடியோடு போய்விட்டால், அவர் பரமாத்மா, நாம் ஜீவாத்மா என்கிற பேதமே போய், அவரே நாமாக, அத்வைதமாக ஆகிவிடுவோம். ‘நீ வேறெனாதிருக்க, நான் வேறெனாதிருக்க’ என்று அருணகிரிநாதர் பாடிய அனுபவத்தை அடைவோம்.

சிவதாஸன் ஜகநாதன்