Wednesday, May 8, 2024

 


1.வேயுறு தோளி பங்கன்

ஒம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

                                                                                                                                                      இன்று கோளறு பதிகத்தின்                                                                                                வேயுறு தோளி பங்கன்                                                                                       என்றுதொடங்கும் முதல் பாடலைப் பார்ப்போம்

                                                                                                                                    
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்மிக                                                                                    நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
                      உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
                      சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
                     அடியாரவர்க்கு மிகவே!

மூங்கிலை ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில் பங்கு கொடுத்திருக்கும் ஐயன்  தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால் தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை வள்ளல்
மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு
களங்கமற்ற பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு (சந்திரன் இயற்கையாய் களங்கமுள்ளவன். அவன் ஐயன் திருமுடியில் அமர்ந்ததால் அவன் களங்கம் நீங்கி மாசறு திங்களானான்).
அவனாகவே அவன் அருளை முன்னிட்டு என் உள்ளத்தில் புகுந்து நிறைந்ததனால்
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்னும் ஒன்பது கோள்களும் (பாம்பு இரண்டு ராகுவும் கேதுவும்)
ஒரு குற்றமும் இல்லாதவை
அவையெல்லாம் ஈசன் அடியவர்க்கு மிக மிக நல்லவையாகும்.

எனவே ஈஸன் அருளும் கருணையும் இருந்தால் எல்லக் கோள்களும் சிவனடியார்களுக்கு நன்மையை மட்டுமே செய்யும் அவைகளால் எந்த தீமைகளும் வராது





வேயுறு தோளி பங்கன் - மூங்கிலை ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில் பங்கு கொடுத்திருக்கும் ஐயன்

விடம் உண்ட கண்டன் - தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால் தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை வள்ளல்

மிக நல்ல வீணை தடவி - மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு

மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து - களங்கமற்ற பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு (சந்திரன் இயற்கையாய் களங்கமுள்ளவன். அவன் ஐயன் திருமுடியில் அமர்ந்ததால் அவன் களங்கம் நீங்கி மாசறு திங்களானான்).

என் உளமே புகுந்த அதனால் - அவனாகவே அவன் அருளை முன்னிட்டு என் உள்ளத்தில் புகுந்து நிறைந்ததனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்னும் ஒன்பது கோள்களும் (பாம்பு இரண்டு ராகுவும் கேதுவும்)

ஆசறு நல்ல நல்ல - ஒரு குற்றமும் இல்லாதவை

அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - அவையெல்லாம் ஈசன் அடியவர்க்கு மிக மிக நல்லவையாகும்.

 

நாளை இரண்டாவது பாடல் விளக்கத்துடன் சந்திப்போம்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்


Tuesday, May 7, 2024


கோளறு பதிகம்

கோளறு பதிகம் தோன்றிய கதை

ஒரு முறை எங்கள் ஊர் திருவெண்காட்டில் திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருக்கோவிலில் சந்தித்து  இறையடியார்களுடன் சேர்ந்து வெண்காட்டு இறைவனை தரிசனம் செய்தார்கள்                                                                                 

அப்பொழுது ஞானசம்பந்தப் பெருமான்

'அப்பரே. அடியார் குழாத்தில் இருந்து ஐயனை வணங்குவது மிக மிக அருமையாக இருக்கிறது. தாங்கள் அடியேனைத் தேடி வந்ததும் நாம் இருவரும் இந்த திருவெண்காட்டுத் திருத்தலத்தில் இருந்து மாதொரு பாகனை வணங்கி வாழ்த்துவதும் எல்லாம் ஐயனின் திருவருளே. நாளெல்லாம் இப்படியே சென்றுவிடக் கூடாதா என்று இருக்கிறது நாவுக்கரசப் பெருமானே!'.என்றார்
நாவுக்கரசர்,
'
முற்றிலும் உண்மை காழிப்பிள்ளையாரே. நாம் இருவரும் சேர்ந்து அவன் புகழைச் செந்தமிழில் பாடவேண்டும் என்பது ஐயனின் ஆவல் போல் இருக்கிறது. அதனால் தான் நம்மை சேர்த்துவைத்திருக்கிறான்'.
ஞானசன்பந்தர்,
'
திருநாவுக்கரசப் பெருமானே. அடியார் குழாம் என்று நான் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டேன். கிடைத்தற்கரிய பேறல்லவா எனக்குக் கிடைத்திருக்கிறது. நற்றுணையாவது நமச்சிவாயமே என்று கல்லைக் கட்டி கடலில் தள்ளிய போதும், சுண்ணாம்பு காளவாயில் வீசப்பட்டப்போதும் இறைவன் திருநாமத்தைச் சொல்லி அந்தத் துன்பங்களில் இருந்தெல்லாம் எந்த வித குறையும் இன்றி வெளிவந்து அரன் நாமத்தின் பெருமையை உலகறியச் செய்த தங்களின் அன்பு அடியேனுக்குக் கிடைத்தது என் பெரும் பாக்கியம்.'
நாவுக்கரசர்,
'
சம்பந்தப் பெருமானே. அடியேன் மீதுள்ள அன்பினால் தாங்கள் என்னை உயர்த்திப் பேசுகிறீர்கள். அம்மையப்பனை நேரே கண்டு உமையன்னையின் திருமுலைப்பாலை அவளே தர உண்டு திருஞானசம்பந்தர் என்ற திருப்பெயரைப் பெற்று இந்த சின்ன வயதில் ஊர் ஊராய் போய் ஐயனைப் பற்றி அழகான தமிழ்ப் பாடல்கள் பாடி வரும் தங்கள் பெருமையே பெருமை. தாங்கள் வெயிலில் வெகுதூரம் நடக்கக் கூடாது என்று ஐயனே தங்களுக்கு முத்துப்பல்லக்கும் முத்துப்பந்தலும் சிவகணங்களின் மூலம் தந்தாரே. என்னே அவன் அருள்! என்னே தங்கள் பெருமை!'.

அடியார் ஒருவர் குறிக்கிட்டு, 'பெருமானே. மதுரையில் இருந்து மகாராணி மங்கையர்கரசியாரிடமிருந்தும் அமைச்சர் குலச்சிறையாரிடமிருந்தும் செய்தி வந்துள்ளது', என்று கூறி ஒரு ஓலையை சம்பந்தரிடம் தருகிறார். அதனைப் படித்துவிட்டு காழிப்பிள்ளையார் அப்பரைப் பார்த்து

'
ஐயனே.பாண்டியன் தேவியாரும் குலச்சிறையாரும் அடியேனை மதுரையம்பதிக்கு வந்து ஆலவாய் அரசனின் ஆலய தரிசனம் செய்ய அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஓலையைப் பார்த்தவுடன் உடனே சென்று அன்னை அங்கயற்கண்ணியுடன் அமர்ந்திருக்கும் திருஆலவாயானைப் பார்க்கவேண்டும் போல் ஆவல் கூடுகிறது'.

திருநாவுக்கரசர் ஒன்றுமே சொல்லாமலும் முகவாட்டம் அடைவதையும் பார்த்து, 'பெருமானே. ஏன் தயங்குகிறீர்கள்? உடனே திருஆலவாய்க்குச் செல்லவேண்டும் என்று என் மனம் பொங்குகிறது. ஆனால் தாங்கள் எதையோ எண்ணிக் கலங்குவதாய்த் தோன்றுகிறது. என்னவென்று தயைசெய்து சொல்லுங்கள்'.

'
ஒன்றும் இல்லை பிள்ளையாரே. பாண்டியன் சமணனாய் மாறிவிட்டான். மதுரையில் சமணர் ஆதிக்கம் அளவில்லாமல் போய்விட்டது என்று கேள்விப்பட்டேன். என் இளம்வயதில் சமணரால் அடியேன் அடைந்த துன்பங்கள் எல்லாம் தங்களுக்குத் தெரிந்திருக்கும். சிறு பிள்ளையான தாங்கள் மதுரைக்குச் சென்றால் அந்த சமணர்களால் ஏதாவது ஊறு விளையுமோ என்று அஞ்சுகிறேன். அதனால் தாங்கள் மதுரைக்குச் செல்லவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்'.

'
அப்பரே. என் தந்தையாரைப் போன்ற அன்பு என் மேல் தங்களுக்கு இருப்பதால் தான் அடியேன் உங்களை அப்பர் என்று அழைத்தேன். உங்களுக்கு சமணர்களால் விளைந்த துன்பங்களெல்லாம் எந்த இறைவனின் திருவருளால் விலகியதோ அதே இறைவன் திருவருள் அடியேனையும் காக்கும் என்பதனை மறந்து கலங்குகிறீர்களே. தாங்கள் இப்போது கலங்குவதைப் பார்க்கும் போது நான் உங்களை அப்பர் என்று அழைத்தது மிகச் சரி என்று தெளிவாகிவிட்டது. என்னை தயைசெய்து தடுக்கவேண்டாம்.'

'
அது மட்டும் இல்லை ஐயனே. இன்று நாளும் கோளும் சரியில்லை. அதனால் இன்று நீங்கள் கிளம்பி மதுரைக்குச் செல்லாமல் பிறிதொரு நாள் சென்றால் மிக்க நலமாகும் என்று அடியேன் எண்ணுகிறேன்'.

'
அப்பரே. நாளும் கோளும் அடியார்க்கு என்றும் மிக நல்லவை என்று தாங்கள் அறியாததா. வேயுறு தோளி பங்கன் ....'கருணை நாம் அறியாததா என்று சொல்லி    வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் என்ற கோளறு பதிகம் பாடியருளினார்


இப்படி தொடங்கியது தான் 'கோளறு பதிகம்' என்னும் இந்தப் பத்துப் பாடல்களும். பதிகப் பொருளை அடுத்தப் பதிவிலிருந்து பார்க்கலாம்

சிவதாஸன் ஜகன்நாதன்

 

Monday, May 6, 2024

 



 

 

ஸ்ரீ பாலராமரை அயோத்திக்கு                   மகிழ்ச்சியுடன் வரவேற்போம்



இப்போதய முழு உலகத்தின் பேச்சு, அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலராம (குழந்தை ராமர்) பற்றி மட்டுமே உள்ளது, மேலும் புனித கும்பாபிஷேக விழா 22.01.2024 அன்று, ஏராளமான ராம பக்தர்கள் மத்தியில், அற்புதமாக நடைபெற்றது!

இனிமேல், அயோத்தி ராமர் கோவில், சக்திவாய்ந்த, இளமையான, மகிழ்ச்சி தரும் பாலராமர் சிலை நிறுவப்பட்டதால், உலகம் முழுவதும் ‘மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில்’ மற்றும், திருமலா திருப்பதியிற்கு நிகரான கோவிலாகக் கருதப்படும்.                                                                                                                                                                                                                                                                                                                     ராமர் புன்னகைக்கும் கவர்ச்சிகரமான ஐந்து வயது சிறுவனாக                           சித்தரிக்கும் வகையில் சிலை செய்யப்பட்டுள்ளது.

இப்போது விக்கிரகத்தின் படங்கள் வெளியிடப்டுள்ளன, பக்தர்கள் ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் அதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், ஏனெனில் அவர்களின் விலைமதிப்பற்ற கடவுளான பாலராமர் இறுதியாக பூமியில் தனது குறிப்பிடத்தக்க உண்மையான இருப்பிடத்தைத் தேர்வு செய்தார்! சிலையில் தத்ருபமான குழந்தை ராமரை காண முடிந்ததால், சிலை செதுக்கப்பட்ட விதம் பக்தர்களுக்கு பிடித்திருந்தது.

பாலராம சிலையைப் பிரதிஷ்டை செய்ய முக்கிய காரணம்                                                                                இளம் வயது ராமரை                                                                                முழு உலகிற்கும் அறிமுகப்படுத்துவதாகும்.                                                              உடுப்பி, குருவாயூர் பாலகிருஷ்ணா போன்று அயோத்தியிலும்                                    ஒரு பாலராம தெய்வம் இருக்க வேண்டும்!

பட்டாபிஷேக ராமனை (அயோத்தியின் முடிசூட்டப்பட்ட மன்னர்) வைத்திருக்காமல், குழந்தை ராமரை அயோத்தியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏன் இருக்கிறது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்!                                                                                                                                                                                    குழந்தை ராம தெய்வத்தை அயோத்தியில் நிறுவுவதற்கான காரணம், பொதுவாக, மக்கள் பெரியவர்களை விட ஒரு குழந்தையால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள், மேலும் நாம் ஒரு குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம், அதற்கு மென்மையான முத்தம் கொடுப்பதன் மூலம் நம் அன்பையும் பாசத்தையும் காட்டுவோம், அல்லது குறைந்தபட்சம் குழந்தையைப் பார்த்தவாவது புன்னகைப்போம்!

அயோத்தி கோவிலில், நம் பாலராமர் மற்ற மதத்திரைக் கூட கவர்ந்துள்ளார். பாலராமனின் குணங்கள் மிகவும் ஆச்சரியமானவை மற்றும் பாலகிருஷ்ணரைப் போலவே உள்ளன; அவர் முழு உலகிற்கும் அமைதியையும் செழிப்பையும் கொண்டு வந்துள்ளார்!

ராமர் தனது கைகளில் சங்கு மற்றும் சக்கரத்துடன் பிறக்கவில்லை என்றாலும், தனது பிரகாசமான முகம் மற்றும் அழகான புன்னகையின் மூலம், அவர் விஷ்ணுவின் தெய்வீக அவதாரம் என்பதை அயோத்தி மக்களுக்கு சாட்சியளித்தார். ராமரின் தாயார் அன்னை கௌசல்யா, ராமர் பிறந்தபோது, விஷ்ணுவின் சக்திகள் தனது வயிற்றில் நுழைந்ததாக கனவு கண்டார்.

வால்மீகி முனிவர் ஒருமுறை நாரதரிடம் பூமியில் பிறந்த உன்னதமான மனிதன் இருக்கிறானா என்று கேள்விக்கேட்ட போது, நாரதர், அயோத்தியில் ஒரு புண்ணியர் பிறந்திருப்பதாகவும், அவர் பெயர் ராமர் என்றும் பதிலளித்தார். நாரதர் வால்மீகிக்கு ராமரின் இயல்பு மற்றும் அவரது நல்ல குணங்களைப் பற்றித் தெளிவாக விளக்கினார்.

இளமையிலேயே பாலராமனும், லட்சுமணனும் விஸ்வாமித்திரருடன் சென்று வில் அம்பு மூலம் பல்வேறு பயங்கர அசுரர்களை அழித்தனர். அவர் அன்னை அகல்யாவை அவரது சாபத்திலிருந்து விடுவித்து, அவரது கணவர் ரிஷி கௌதமமருடன் சேருமாறு கேட்டுக்கொண்டார். இராமனும் மற்றும் லட்சுமணன், விஸ்வாமித்திரர் முனிவருடன் மிதிலைக்குச் சென்றனர். அங்கு அவர்களை மிதிலை நாட்டு மன்னன் ஜனகன் வரவேற்று, ஜனக மகாராஜாவின் விருப்பப்படி ராமன் வில்லை (சிவதனுஷ்) தூக்கி உடைத்தான். இந்த அதிசய சம்பவத்தைக் கண்ட ஜனகர் மிகவும் மகிழ்ந்து, தனது மகள் சீதையை ராமருக்கு திருமணம் செய்து வைக்க அயோத்திக்கு தூதர்களை அனுப்பினார்.

தன் தந்தை தசரதனுக்கு ராமன் கொடுத்த மரியாதையையும், தசரதன் கட்டளையை ஏற்று காட்டுக்குச் சென்றதையும் ராமாயணம் சொல்கிறது. குரு பக்தி, தந்தை, தாய், மனைவி மீது கொண்ட அன்பு, பாசம் போன்றவற்றில் மற்றவர்களுக்கு ராமர் முன்னுதாரணமாக திகழ்கிறார். மேலும் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் உண்மை போன்ற நல்ல பண்புகள் ராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஜெய் ஸ்ரீ பாலராம நமோ நமஹ

சிவதாஸன் ஜகன்நாதன்