வணக்கம் நீண்ட நாட்களுக்குப்பின் என் எண்னங்களைத்தொடர்வதில் பெரு மகிழ்வடைகின்றேன்
இந்தத்தொடரில் ஸ்ரீ ஆதிசங்கரர் திருச்செந்திலாண்டவன்மீது அருளிய சுப்ரமண்ய புஜங்கம் என்ற உன்னதமான 33 பாடல்கள் பற்றி எழுத எண்ணியுள்ளேன்
'புஜங்கம்' என்றால் 'தோளால் நகர்ந்து செல்லும் பாம்பு' என்று பொருள். இச்சொல் வடமொழியில் உள்ள ஒருவகை யாப்பைக் குறிக்கும். இப்புஜங்கக் கவியுள் அமைந்து கிடக்கும் சொற்கோவை பாம்பொன்று வளைந்து வளைந்து செல்லுவது போல் இருப்பதால் இத்தகைய கவிக்குப் புஜங்கம் எனப் பெயருண்டாயிற்று.
ஸ்ரீ ஆதிசங்கரரின் கல்வி, தவம், யோகம் முதலியவற்றின் மேன்மையைக் கண்டு பொறாமை அடைந்த அபிநவ குப்தர் என்ற புலவரொருவர் மந்திர ஏவலால் பகவத்பாதர்கள் காச நோயால் துன்புறச் செய்தார். இந்நோயால் சங்கரர் தாங்கமுடியாதவாறு துடித்துத் தவித்தார். ஒருநாளிரவு சிவப் பரம்பொருள் இவருடைய கனவில் தோன்றி 'ஜயந்தி புரம்' எனும் திருத்தலத்தில் சூரபன்மாவை வென்றழித்துவிட்டு, 'ஜய வின்ப வடிவமாய்' விளங்கும் என் குமாரனாகிய செந்திற்குமரனைக் கண்டு வழிபட்டால் இக்கொடிய வியாதி அடியோடு உன்னை விட்டு நீங்கும் என்று கூறித் திருநீறும் அளித்தருளினார். ஆச்சாரியர் அதனை ஏற்று அணிந்து தம்மைப் பிடித்திருந்த நோய் நீங்கப்பெற்றார்.
மறுநாள் தம்முடிய யோக சத்தியால் திருச்செந்தூர் என வழங்கப் பெறும் ஜயந்தி புரத்தை அடைந்தார். அங்கு ஆதிசேடன் என்னும் தெய்வ நாகம் திருச்செந்தில்நாதன் திருவடிகளில் வழிபாடு செய்தலைக் கண்ணுற்றார். உடனே 'பாம்பு' எனும் பொருளைத் தரும் 'புஜங்கம்' என்னும் பெயரைக் கொண்ட புது வகை யாப்பில் வடமொழியில் முப்பத்து மூன்று கவிகள் கொண்ட திருப்பாமாலை படைத்துத் திருச்செந்திலாதிபன் திருவடிக்குச் சூட்டினார். இது தான் 'திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம்' தோன்றிய வரலாறாகும்.
இந்த 33 பாடல்களும் சமஸ்க்ருதத்தில் எழிலுடன் அமைந்தவைகளாகும் அவைகளின் சொல்லழகை உணர்ந்து போற்றுதற்கு சமஸ்க்ருத ஞானம் வேண்டுமாயினும் அவைகளின் பொருட்செறிவு மிகச்சிறப்புடையதாகும் அந்தப் பொருள் நயங்களை உணர சமஸ்க்ருத ஞானம் தேவையில்லை .சுப்ரமண்யபுஜங்க்த்தை பலர் மொழிபெயர்த்துள்ளார்கள்
நானும் என் சிற்றறிவுக்கு எட்டியவரயில் எளியோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் தந்துள்ளேன் .அவைகள் யாருக்கேனும் பயனுள்ளவையா யிருந்தால் அந்தப்பெருமை அந்த செந்திலோனுக்கே சேரும் அதில் ஏதேனும் குற்றங்களிருந்தால் அவை என்னையேச்சேரும்
நான் பேரறிஞனோ புலவனோ அல்ல நான் தமிலரிந்தவநேயன்ரி தமிழ்ப்புலவனல்ல இதொஅ ஸ்ரீ சுப்ரமண்யபுஜங்கம் தமிழில்
என்றும் குன்றா இளமையுடையோன் யானை முகத்தோன் நன்றான ஐந்துமுகத்தான் விரும்பி மாலயனால்
தேடப்படுவோன் குன்றென
மங்களங்களருளும் கண நாதனாகிய வினாயகனின் குன்றாது
பெருகிடும் நல்லருளை வேண்டி வணங்குவோமே 1
நாளை மீண்டும் சந்திப்போம்