மீண்டுமிப்பிறவிவேண்டுமே
இப்ரபஞ்சம்படைத்துக்காத்தருளும்ஈஸனாய் இப்ரபஞ்சமாளும்முத்தேவரில்முன்னவனாய்
எப்பொழுதும்தேவர்க்கும்மாந்தர்க்குமானானை முப்போதும்தொழமீண்டுமிப்பிறவிவேண்டுமே 1
ஐந்தழகுமுகங்கள்கொண்டபரமனானாய்
ஐந்தெழுத்துநமஸிவாயபஞ்சாக்ஷரமானாய் ஐந்தும்தானேயாகிபஞ்சபூதங்களானாய்
ஐந்துமடக்கிடமீண்டுமிப்பிறவிவேண்டுமே 2
கொன்றையும்எருக்கும்நதியொடுமுடிகொண்டாய் நன்றானநூலும்கபாலமும்நடுமார்பில்அணிந்தாய் வென்றபுலித்தோல்இடையில்நன்றாகஅணிந்தாய் என்றென்றுமுனைக் காணமீண்டு
மிப்பிறவிவேண்டுமே 3
முப்புறமெரித்துமூவுலகோரும்மகிழக்காத்தாய் எப்பொழுதும்தொழுவோர்வம்சம்காக்கநின்றாய் தப்பாமல்ஆணவத்தக்கன்யாகமழித்தருளினாய் எப்பொழுதும்தொழமீண்டுமிப்பிறவிவேண்டுமே 4
கற்றகல்வியும்பெற்றவித்தையும்கடலாகுமே
நற்றமிழால்இசைத்தவைநல்லருளேயருளுமே
பெற்றமக்களும்சுற்றமும்நலமோடுவாழ்வாரே
உற்றநினதடிதொழமீண்டுமிப்பிறவிவேண்டுமே 5
நித்தமும்குறையாநலங்களருளும்நடேசனே
மத்தமும்மதிநதியும்முடிகொண்டமஹேசனே பித்தனாய்பேயனாய்சுந்தரனுக்கருளியபரமனே எத்தனைப்பிறவியினும்மீண்டுமிப்பிறவிவேண்டுமே 6
தண்டையணிந்து தூக்கியாடியதிருவடிகளும்
கொண்டதிரிசூலமோடிலங்கும்திருக்கரங்களும்
நன்றானமுப்புரிநூலும்கபாலமுமிலங்குமார்பும் கண்டுகண்டுமகிழமீண்டுமிப்பிறவிவேண்டுமே 7
வேலவனைத்தரத்திறந்தமூன்றாம்நுதற்கண்ணும்
காலனைஉதைத்ததண்டையணிதிருவடிகளும் மாலவனுக்குசக்கரமருளியவழகுக் கரங்களும் காலமெல்லாம்காணமீண்டுமிப்பிறவிவேண்டுமே 8
பேரழகுத் திருமேனி பரவிடும்பரமனைக்காண பேரருட்கருணைபொழி
கருணாகரனைக்காண பேராயிரமுடைபோராளன்பெம்மானைக்காண
பேரருளானைவேண்டமீண்டுமிப்பிறவிவேண்டுமே 9
திரிபுரமெரிக்கப்பினாகம்
கொண்டகருணாளனை
கரமெட்டில்படைக்கலங்கள்பலகொண்டபரமனை வரங்கள்வற்றாதருளும்வள்ளல்விஸ்வேசனை கரம்தூக்கித்தொழுதிடமீண்டுமிப்பிறவிவேண்டுமே 10
அத்வைதமாய்யாவும்தானேயானஅரனை
மத்தமும்மதியும்முடிகொண்டமஹேசனை
எத்தனையும்தருவனைஜகன்நாதன்பாடியவை
அத்தனையும்தவறாதுதருவதுதிண்ணமே
No comments:
Post a Comment