Sunday, September 10, 2023

 


 

ஞாயிற்றுக்கிழமை

1. விநாயகர்

சுக்லாம்பர தரம் விஷ்ணும்
     சசிவர்ணம் சதுர்ப் புஜம்
பிரசன்ன வதனம் த்யாயேத்
     சர்வ விக்னோப சாந்தயே


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
     நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
     தப்பாமல் சார்வார் தமக்கு


முருகன் 

கந்த புராணம
மூவிரு முகங்கள் போற்றி
      முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
       ஈராறு தோள் போற்றி - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
      மலரடி போற்றி - அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
      திருக்கைவேல் போற்றி போற்றி

ஷண்முக காயத்ரீ 
                                    ஓம் தத்புருஷாய வித்மஹே                                                              மஹாஸேனாய தீமஹி/
தந்நஷ் ஷண்முக: ப்ரசோதயாத் //


சிவன் 

மாசில் வீணையும்  மாலை மதியமும்
      வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
      ஈசன் எந்தை இணையடி நீழலே.

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
     நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
     நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

ஸ்ரீ ருத்ர காயத்ரீ

                                 ஓம் தத்புருஷாய வித்மஹே                                                                          மஹா தேவாய தீமஹி/
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்//


அம்பாள்

அபிராமி அந்தாதி

நின்றும் இருந்தும் கிடந்தும்
     நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்
     தாள் எழு தாமரையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே
     உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா
     முத்தி ஆனந்தமே.

அண்ணபூர்ணா காயத்ரீ

                            ஓம் பகவத்யைச வித்மஹே                                                          மாஹேச்வர்யைச தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்//


விஷ்ணு

திவ்ய பிரபந்தம் | தொண்டரடி பொடியாழ்வார் அருளி செய்த திருமாலை 

பச்சைமா மலைபோல் மேனி
     பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம்
    கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
     இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
      அரங்கமா நகருளானே.


விஷ்ணு காயத்ரீ

                               நாராயணாய வித்மஹே                                                               வாஸுதேவாய தீமஹி/
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத் //

சூரியன்

சீலமாய்ல் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.

ஸூர்ய காயத்ரீ

                         ஓம் அச்வ த்வஜாயவித்மஹே                                                          பாஸஹஸ்தாய தீமஹி/
தந்நஸ் சூர்ய: ப்ரசோதயாத் //

ஸூர்ய ஸ்துதி

ஜபா குஸூமஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி  திவாகரம்

 

No comments:

Post a Comment