கால்சியம் நம் உடல் நலம் முறையாகப்பேணப்படுவதற்க்கு
தேவையான முக்கியமான தாதுக்களில் ஒன்றான கால்சியம் பற்றி இன்று அறிவோம் மேலும் சமீபத்தில்
தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்ட்தால், சுண்ணாம்பு பற்றி தெரிந்து கொள்வது பொறுத்தமாகவும் இருக்கும்.ஏனெனில்
பெண்களுக்கு சுண்ணாம்பு சத்துமிகவும் அவசியமான ஒன்றாகும்
எலும்புகள், பற்கள் இவற்றில் மட்டும் இன்றி தசை செல்களிலும்
இரத்ததிலும் கால்ஸியம் உண்டு. சில வகை என்சைம்கள் மற்றும் தசைகள் சுருங்கி விரிய
(பெரும்பாலான உடல் இயக்கம் நிகழ) கால்சியம் மிக அவசியம். இரத்தம் உறையவும் இதயம்
சரியாக இயங்கவும் கால்சியம் மிக அவசியம்.செல்களின் பலவிதமான செயல்பாடுகளுக்கும்
கால்சியம் அவசியமாகும்
நம் உடல் அமைப்பு திசுக்களில் உள்ள
கால்சியத்தின் அளவை சீராக வைத்திருக்க முயல்கிறது. இதற்கு ஒரு நாளைக்கு 1000 முதல் 1500 மில்லிகிராம் உட்கொள்ள
வேண்டும்.போதுமான கால்சியம் உணவில் சேர்த்துக்கொள்ளாதபோது எலும்புகளில் இருந்து
கால்சியத்தை இரத்ததிற்கு
அனுப்புகிறது. ஆனால் அதிக கால்சியத்தை கரைத்துவிட்டால், எலும்புகள் சக்தி இழந்து
உடைகின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் [OSTEOPOROSIS] என்ற எலும்புஇளைக்கும் நோய் வரவும் காரணம் ஆகிறது.
உடலில் கால்சியத்தின் அளவை சீராக வைக்க பாரதைராய்டு
[PARATHYROID] என்னும் சுரப்பி
சுரக்கும் [PARATHARMONE] என்ற ஹார்மோனும், கால்சிடோனின் என்ற ஹார்மோனும் பெருமளாவில்
உதவுகின்றன.
இரத்ததில் கால்சியம் அளவு குறையும் போது பாரதைராய்டு
சுரப்பி அதிக அளாவில் சுரப்பதும், கல்சியம் அளவு அதிகரிக்கும் போது குறைவாக
சுரப்பதும் என்று அளாவுக்கேற்றார்ப்போல் சுரக்கிறது. இந்த ஹார்மோன் வைட்டமின் D கிரகிக்கும் சக்தியை
அதிகரிக்கிறது. வைட்டமின் டி கால்ஸியம் கிரகிப்பதை அதிகரிக்கிறது. எலும்புகளில்
உள்ள கால்சியத்தை கரைப்பதும், சிறுநீரகங்கள் மூலமாக வெளியேறும் கால்சியத்தின்
அளவை குறைப்பதும் இதன் செயல்பாடுகளில் அடங்கும். கால்சிட்டோனின் [CALCITONIN] அதற்கு மாறாக
இரத்தத்திலிருந்து கால்சியத்தை எலும்புகளுக்கு அனுப்புகிறது.
கால்சியம் குறைவாக இருந்தால் அதற்கு ஹைப்போ காலசீமியா[HYPOCALCAEMIA] என்று பெயர்.
பொதுவாக கால்சியம் அல்புமின் என்ற புரதத்துடன் சேர்ந்தே இரத்தத்தில் இருக்கும்.
அல்புமினுடன் சேர்ந்திருக்கும் போது செயல் இழந்து இருக்கும் கால்சியம், திசுக்கள் சென்றவுடன் அல்புமிநிலிருந்து பிறிந்து செயல்திறன் மிக்கதாக கால்சியம் அயானாக மாறுகிறது. இரத்ததில்
அல்புமினுடன் சேராத கால்சியம் இல்லாதவரை எந்த பிரச்சினையும் இல்லை. மொத்த
கால்சியம் எனக்குறிப்பிடப்படுவது அல்புமினுடன் சேராத வீரியம் மிக்க
கால்சியத்தையே ஆகும்.
அதிக கால்சியம் சிறுநீரில் வெளியேறுவதால் அல்லது
எலும்புகளில் இருந்து கால்சியம் இரத்ததில் கரையாமல் இருந்தால் குறைந்த கால்சியம்
உண்டாகும். பாராதைராய்டு சுரப்பிகள் மிக குறைவாக சுரப்பதாலும், பாராதைராய்டு சுரப்பிகள் இல்லாமல்
பிறந்திருந்தாலும் இந்நிலை உண்டாகும்.
மக்னீசியம் என்ற தாது குறைவாக இருந்தாலோ அல்லது
வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தாலோ கால்சிய குறைய வாய்ப்புகள் உண்டு
குறைவான கால்சியம் ஆரம்பத்தில் எந்த விளைவுகள்
கொடுக்காவிட்டாலும், நாளடைவில்
மூளையில் சில விளைவுகளை தரக்கூடும். இது மன நலத்தை பாதிக்கவும் செய்யலாம். குழப்பம், நினைவு தவறுதல், மன அழுத்தம், கற்பனை) ஆகியவை ஏற்படக்கூடும்.
இந்நிலை கால்சியம் அளவு சரியான உடனே நீங்கிவிடும்.
சில சமயம் குறைந்த கால்சியம் இதய துடிப்பை பாதிக்கவும், தொண்டையில் உள்ள தசைகளில்
விரைப்புத்தனமையை தரக்கூடும்.
கால்சிஉம் குறைபாட்டினை கண்டறிந்து நிவர்த்தி
செய்வது மிக அவசியமாகும் இன்று கால்சியம் குறைபாட்டினை நீக்க பல மாத்திரைகள்
உள்ளன
உணவுப்பொருள்களில் பால் காய்கறிகள் கடல் உணவுகள்
ஆகியவற்றில் அதிக அளவில் கால்சியம் உள்ளது ஸரியான மற்றும் முறையான உணவை உண்பதின்
மூல்ல் நாம் நமது கால்சியத்திம் அளவை சரியாக வைத்துக்கொள்ள முடியும்
|
|
Tuesday, March 13, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment