Monday, March 19, 2012


ருத்ராக்ஷம்
   ருத்ராக்ஷம் என்பது ருத்ரரின் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர்த்துளிகள் திடஉருவம் பெற்று உண்டானவையாகும் ருத்ரரின் கண்களிலிருந்து உண்டானதால் ருத்ர அக்ஷம் எனப்பெயர் பெற்றது
   பெண்களுக்கு மாங்கல்யம் போல சிவனடியார்களுக்கு உத்ராக்ஷம்
அவசியமானதாகும்
  ருத்ராக்ஷத்தை தரிசித்தால் லக்ஷம் மடங்கும் தொட்டால் கோடி மடங்கும் அணிந்தால் நூறு கோடியும் ஜெபித்தால் ஆயிரம் கோடி மடங்கும் புண்ணியம் உண்டாகும் என்றும் புரானங்கள் கூறுகின்ற்ன
   ருத்ராக்ஷம் பல முகங்களில் கிடைக்கின்றது
ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு
 ஒரு முகம் பரம ஸ்வரூபம்
இரு முகம் அர்த்தனாரீஸ்வரஸ்வரூபம்
மூன்று முகம் த்ரிகாக்னி ஸ்வரூபம்[மூன்று அக்னிகள்]
நாங்கு முகம் ப்ரம்மஸ்வரூபம்
ஐந்து முகம் ஈஸ்வரஸ்வரூபம்
ஆறுமுகம் சுப்ரமண்யஸ்வரூபம்
ஏழுமுகம் சப்தமாதாஸ்வரூபம்
எட்டுமுகம் அஷ்டவசுக்கள் ஸ்வரூபம்
ஒன்பது முகம் நவசக்திஸ்வரூபம்
ப்த்து முகம் எம ஸ்வரூபம் [எம பயம் போக்கி ஆயுள் விருத்தி அளிக்கும்]
பதினொரு முகாதிப்தி பதினொரு ருத்திரர்
பன்னிரண்டு முகம் மஹாவிஷ்னு ஸ்வரூபம்
பதிமூன்று முகம் காமதேவஸ்வரூபம்
பதினாங்கு முகம் சகல சௌபாக்யமும் அருளவல்லது

   108 ருத்ராக்ஷங்களை கொண்ட மாலையை அணிபவந் பல அஸ்வமேத யாகங்களை செய்த பலனை அடைகின்றான்
  ருத்ராக்ஷத்தின் அடி ப்ரம்மா உடல் விஷ்னு முகம் ஈஸ்வரன்
  ருத்ராக்ஷ மாலை கொண்டு ஜெபித்தால் அதிக பலம் அதிக் புண்ணியம் உண்டாகும்
  இரு முகம் ஐந்துமுகம் பதினொறுமுகம் மற்றும் பதினாங்கு முகங்களை கொண்ட ருத்ராக்ஷங்களை அணிவது சிறப்புடயதாகும்
ஆயமாமணி ஆயிரம் புணைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப்பரமனெனப் ப்ணிகுவார் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மணிதரோ சொல்வீர்
  என்று ருத்ராக்ஷத்தின் பெருமையை பிரமோத்திர காண்டம் சிறப்பித்து கூறுகின்றது

ருத்ராக்ஷம் அணிந்து ஈசனருள் பெறுவோம்


Tuesday, March 13, 2012


கால்சியம்                         நம் உடல் நலம் முறையாகப்பேணப்படுவதற்க்கு தேவையான முக்கியமான தாதுக்களில் ஒன்றான கால்சியம் பற்றி இன்று அறிவோம் மேலும் சமீபத்தில் தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்ட்தால், சுண்ணாம்பு பற்றி தெரிந்து கொள்வது பொறுத்தமாகவும்  இருக்கும்.ஏனெனில் பெண்களுக்கு சுண்ணாம்பு சத்துமிகவும் அவசியமான ஒன்றாகும்
எலும்புகள், பற்கள் இவற்றில் மட்டும் இன்றி தசை செல்களிலும் இரத்ததிலும் கால்ஸியம் உண்டு. சில வகை என்சைம்கள் மற்றும் தசைகள் சுருங்கி விரிய (பெரும்பாலான உடல் இயக்கம் நிகழ) கால்சியம் மிக அவசியம். இரத்தம் உறையவும் இதயம் சரியாக இயங்கவும் கால்சியம் மிக அவசியம்.செல்களின் பலவிதமான செயல்பாடுகளுக்கும் கால்சியம் அவசியமாகும்
 நம் உடல் அமைப்பு திசுக்களில் உள்ள கால்சியத்தின் அளவை சீராக வைத்திருக்க முயல்கிறது. இதற்கு ஒரு நாளைக்கு 1000 முதல் 1500 மில்லிகிராம் உட்கொள்ள வேண்டும்.போதுமான கால்சியம் உணவில் சேர்த்துக்கொள்ளாதபோது எலும்புகளில் இருந்து கால்சியத்தை  இரத்ததிற்கு அனுப்புகிறது. ஆனால் அதிக கால்சியத்தை கரைத்துவிட்டால், எலும்புகள் சக்தி இழந்து உடைகின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் [OSTEOPOROSIS] என்ற எலும்புஇளைக்கும் நோய் வரவும் காரணம் ஆகிறது.
உடலில் கால்சியத்தின் அளவை சீராக வைக்க பாரதைராய்டு [PARATHYROID] என்னும் சுரப்பி சுரக்கும் [PARATHARMONE] என்ற ஹார்மோனும், கால்சிடோனின் என்ற ஹார்மோனும் பெருமளாவில் உதவுகின்றன.
இரத்ததில் கால்சியம் அளவு குறையும் போது பாரதைராய்டு சுரப்பி அதிக அளாவில் சுரப்பதும், கல்சியம் அளவு அதிகரிக்கும் போது குறைவாக சுரப்பதும் என்று அளாவுக்கேற்றார்ப்போல் சுரக்கிறது. இந்த ஹார்மோன் வைட்டமின் D கிரகிக்கும் சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் டி கால்ஸியம் கிரகிப்பதை அதிகரிக்கிறது. எலும்புகளில் உள்ள கால்சியத்தை கரைப்பதும், சிறுநீரகங்கள் மூலமாக வெளியேறும் கால்சியத்தின் அளவை குறைப்பதும் இதன் செயல்பாடுகளில் அடங்கும். கால்சிட்டோனின் [CALCITONIN] அதற்கு மாறாக இரத்தத்திலிருந்து கால்சியத்தை எலும்புகளுக்கு அனுப்புகிறது.
கால்சியம் குறைவாக  இருந்தால் அதற்கு ஹைப்போ காலசீமியா[HYPOCALCAEMIA] என்று பெயர். பொதுவாக கால்சியம் அல்புமின் என்ற புரதத்துடன் சேர்ந்தே இரத்தத்தில் இருக்கும். அல்புமினுடன் சேர்ந்திருக்கும் போது செயல் இழந்து இருக்கும் கால்சியம், திசுக்கள் சென்றவுடன் அல்புமிநிலிருந்து பிறிந்து செயல்திறன் மிக்கதாக  கால்சியம் அயானாக மாறுகிறது. இரத்ததில் அல்புமினுடன் சேராத கால்சியம் இல்லாதவரை எந்த பிரச்சினையும் இல்லை. மொத்த கால்சியம் எனக்குறிப்பிடப்படுவது அல்புமினுடன் சேராத வீரியம் மிக்க கால்சியத்தையே ஆகும்.
அதிக கால்சியம் சிறுநீரில் வெளியேறுவதால் அல்லது எலும்புகளில் இருந்து கால்சியம் இரத்ததில் கரையாமல் இருந்தால் குறைந்த கால்சியம் உண்டாகும். பாராதைராய்டு சுரப்பிகள் மிக குறைவாக சுரப்பதாலும், பாராதைராய்டு சுரப்பிகள் இல்லாமல் பிறந்திருந்தாலும் இந்நிலை உண்டாகும்.
மக்னீசியம் என்ற தாது குறைவாக இருந்தாலோ அல்லது வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தாலோ கால்சிய குறைய வாய்ப்புகள் உண்டு
குறைவான கால்சியம் ஆரம்பத்தில் எந்த விளைவுகள் கொடுக்காவிட்டாலும், நாளடைவில் மூளையில் சில விளைவுகளை தரக்கூடும். இது மன  நலத்தை பாதிக்கவும் செய்யலாம். குழப்பம், நினைவு தவறுதல், மன அழுத்தம், கற்பனை) ஆகியவை ஏற்படக்கூடும்.
இந்நிலை கால்சியம் அளவு சரியான உடனே நீங்கிவிடும். சில சமயம் குறைந்த கால்சியம் இதய துடிப்பை பாதிக்கவும், தொண்டையில் உள்ள தசைகளில் விரைப்புத்தனமையை தரக்கூடும்.
கால்சிஉம் குறைபாட்டினை கண்டறிந்து நிவர்த்தி செய்வது மிக அவசியமாகும் இன்று கால்சியம் குறைபாட்டினை நீக்க பல மாத்திரைகள் உள்ளன
உணவுப்பொருள்களில் பால் காய்கறிகள் கடல் உணவுகள் ஆகியவற்றில் அதிக அளவில் கால்சியம் உள்ளது ஸரியான மற்றும் முறையான உணவை உண்பதின் மூல்ல் நாம் நமது கால்சியத்திம் அளவை சரியாக வைத்துக்கொள்ள முடியும்



Monday, March 12, 2012


ஒரு இடைவெளிக்குப்பின் சந்திக்கின்றோம்

  பல சொந்த காரணங்களினால் நம் சந்திப்பு கொஞ்ச நாள் தடை பட்டதற்கு வருந்துகிறேன்.
  இறை பூஜையின் போது அவருக்கு பதினாறு வகையான உபசாரங்கள் செய்து பூஜிக்க வேண்டும்.அவைகளை சோடேச உபசாரங்கள் என்று சொல்வார்கள்
1.ஆசனம்                  இருக்கை அமைத்தல்
2.பாத்யம்                  பாதங்களில் நீர்விட்டு சமர்ப்பித்தல்  அடி நீர்
3.அர்கயம்                  முடியில் நீர்விட்டு அபிஷேகித்தல்   முடி நீர்
4.ஆசமனீயம்               அருந்தநீரளித்தல்                   குடி நீர்
5.ஸ்னானம்                     அபிஷேகித்தல்
6.வஸ்த்திரம்               ஆடை அணிவித்தல்
7.உபவீதம்                 முப்புரி நூல் அணிவித்தல்
8.கந்தம்                    சந்தனம் அணிவித்தல்
9.அக்ஷதான்                அக்ஷதை அளித்தல்
10.புஷ்பம்                   மலரணிவித்தல்
11 தூபம்                   தூபம அளித்தல்
12தீபம்                    தீபாராதனை செய்தல்
13.நைவேத்யம்             நைவேத்யம் செய்தல்
14.தாம்பூலம்               தாம்பூலமளித்தல்
15.ப்ரதக்ஷினம்              வலம் வருதல்
16.நமஸ்காரம்              மனமுருகி விழுந்து வணங்குதல்
  இந்த பதினாறு உபசாரங்களை தினமும் ஈசன் முன் செய்வதால் சிவ பூஜை செய்த பலன் நிறைவுறும் அவர் மனமகிழ்ந்து நலங்களும் வளங்களும் அபரிமிதமாக தந்த்ருள்வார்